பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்
புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் மேற்கொண்டார்.;
Update: 2024-01-03 02:05 GMT
ஆட்சியர் கலந்துரையாடல்
திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்துரையாடினார் அப்போது அவருக்கு மாணவர்களுக்கு தெரிவித்ததாவது 10, 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆகிய உங்களுக்கு பொது தேர்விற்கு மிக குறுகிய காலமே உள்ளது. இதுவரை நீங்கள் படித்ததனை பொருட்படுத்தாமல் தற்போதுள்ள நேரத்தை எந்தவித காரணமும் சொல்லி விரயம் செய்யாமல் நல்ல முறையில் பயன்படுத்தி படிக்க வேண்டும். நீங்கள் முந்தைய தேர்வில் எழுதிய தேர்வினை கொண்டு உங்களுக்கு மதிப்பெண் வழங்கப்போவதில்லை .எனவே அதனை கருத்தில் கொள்ளாமல் பொதுத்தேர்விற்கு உங்களுடைய கடின முயற்சியினை செலுத்த வேண்டும் என தெரிவித்தார் . இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ,பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.