பட்டு வளர்ப்பு கொட்டகை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பட்டு வளர்ப்பு கொட்டகை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
Update: 2024-02-14 10:54 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், ஜெகதாப் ஊராட்சி, பங்கதாதன் கொட்டாயில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ₹6 இலட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் பயனாளி முனியப்பன் அவர்களின் பட்டு வளர்ப்பு கொட்டகை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.