நியாய விலைக் கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தமிழக முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-22 16:03 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோட்டக்கலைத்துறை வேளாண்மை பொறியியல் துறை ஊரக வளர்ச்சித் துறை திட்டங்களில் இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தமிழக முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வழியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கெட்டூர்,ஆதனுர் நியாய விலை கடைகளில் பொருட்கள் தரமாக வழங்கப்படுகிறதா எனவும் தேவையான அளவு இருப்பு உள்ளதா எனவும் அங்கு உள்ள ஊழியரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படும் முறைகளைக் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார் இந்த நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.