அரசு பள்ளியில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள்

Update: 2023-12-03 08:48 GMT

அறிவியல் செயல்முறை கண்காட்சி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளியில் 6 முதல் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி அளவில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத்தில் வானவில் மன்ற போட்டிகளான அறிவியல் நாடகம், அறிவியல் கண்காட்சி அறிவியல் செயல்பாடுகள் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகளான அறிவியல் நாடகம், அறிவியல் கண்காட்சி அறிவியல் செயல்பாடுகள் போட்டிகள், துறையூர் சாலையில் உள்ள பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியினை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜோதிலெட்சுமி, அருண்குமார், வட்டார மேற்பார்வையாளர் தேவகி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள், நடுவர்களாக அறிவியல் நாடகம் போட்டிக்கு ஆசிரியர் பயிற்றுநர் சுப்ரமணியன் வானவில் மன்ற கருத்தாளர் வசந்தி அறிவியல் கண்காட்சி போட்டிக்கு ஆசிரியர் பயிற்றுநர் ரமேசு , பட்டதாரி ஆசிரியர் முருகேசன் அறிவியல் செயல்பாடுகள் போட்டிக்கு ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ், வானவில் மன்ற கருத்தாளர் அன்பரசி ஆகியோர் செயல்பட்டனர் இப்போட்டிகளில் அறிவியல் நாடகத்தில் அறிவியல் அறிஞர்களான அப்துல் கலாம், ஐன்ஸ்டீன், கலிலியோ நியூட்டன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளை வேடமிட்டு நாடகமாக நடித்தனர், அறிவியல் கண்காட்சியில் சுற்றுச்சூழல் மாசுபாடு, ஒளிச்சேர்க்கை, சூரிய குடும்பம், உலகம் வெப்ப மயமாதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, எண்களின் மந்திரம் ஆகிய தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகள் காட்சி படுத்தப்பட்டது. அறிவியல் செயல் திட்டம் போட்டியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற தலைப்பில் செயல் திட்ட மாதிரிகள் மாணவர்களை காட்சிபடுத்தி விளக்கினார்கள்.

Tags:    

Similar News