மண்ணச்சநல்லூர் அருகே திமுக கிளை கூட்டம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக கிளைச் செயலாளர் பி எல் ஏ 2 கூட்டம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-10 14:37 GMT
வருகின்ற ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அய்யம்பாளையம் ஊராட்சியில் திமுக கிளை செயலாளர்களின் பி எல் ஏ 2 கூட்டம் நடைபெற்றது.
இதில் தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டதிமுக கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.