திமுக கவுன்சிலர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட குப்ப கவுண்டர் தெருவில் உயர்மின் கோபுர விளக்கும் அமைக்கும் பணியில் வாக்குவாதம் ஏற்பட்டு திமுக கவுன்சிலர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தருமபுரி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.;
Update: 2024-03-09 07:26 GMT
காவல்துறை விசாரணை
தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏ.எஸ்.டி.சி. நகரை சேர்ந்தவர் ஜெகன் தி.மு.க. நகராட்சி கவுன்சிலர். இவர் நேற்று 7-வது வார்டு குப்பா கவுண் டர் தெருவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிக்கான பூமிபூஜையில் கலந்து கொள்ள சென்றார். அப்போது அந்த வார்டை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சத்யா, அவருடைய கணவர் கார்த்திக் மகன் மற்றும் கார்த்திக் தந்தை விஜயன் ஆகியோர் எங்கள் வார்டில் தங்களுக்கு தெரியாமல் இந்த பணியை செய்யக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெகன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஜெகன் கொடுத்த புகாரின்பேரில் தர்மபுரி பி ஒன் நகர காவல் துறையினர் அ.தி.மு.க. கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் - மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்