அரசியல் தலைவர்கள் வேடமிட்டு கலைஞர்கள் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வத்தை ஆதரித்து கருணாநிதி, ஸ்டாலின், கமலஹாசன் வேடம் அணிந்த கலைஞர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;

Update: 2024-04-16 02:00 GMT

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன் ஆகியோர் வெங்கடாபுரம் செவிலிமேடு பல்லவன் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்று கொண்டு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கு ஆதரவாக திரை கலைஞர்கள் கருணாநிதி, ஸ்டாலின், கமல்ஹாசன் வேடமணிந்து திறந்த ஜீப்பில் இவர்களுடனே பின் தொடர்ந்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

Advertisement

அரசியல் தலைவர்கள் வேடமணிந்த நபர்களை கண்ட பொதுமக்கள் சற்று ஆச்சரியத்துடன் பார்த்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது பகுதி மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடியே அனைவரும் வாக்குகள் சேகரித்தனர். அந்தந்த பகுதிகளில் கிளைச் செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் என பல சிறப்பான வரவேற்பு அளித்து பகுதிகளில் வாக்குகள் சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்ப்பாக்கம் மாகரல் களக்காட்டடூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் ஒன்றிய செயலாளர் குமணனுடன் இணைந்து வாக்குகள் சேகரித்தார்.

Tags:    

Similar News