எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.;
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ... சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் நகராட்சி பகுதியில் நடைப்பெற்ற திமுக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி நகர கழக செயலாளர் பாஷா தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி பங்கேற்று வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடத்தில் எடுத்துக் கூறி எப்படி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார்.
அப்போது சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சம்பத் குமார், நகர வார்டு செயலாளர்கள் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.