பங்குநத்தம் பகுதியில் திமுக தீவிர பிரசாரம்

நல்லம்பள்ளி அருகே பங்குநத்தம் பகுதியில் திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;

Update: 2024-04-02 07:47 GMT

 இந்தியா கூட்டணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி தருமபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் பங்குநத்தம் பகுதியில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி தலைமையில் ஒன்றிய கழக செயலாளர் வைகுந்தம் மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன் ஏற்பாட்டில் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்தும் தமிழக அரசு பொதுமக்களுக்கு செய்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து திமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்தனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் சித்தன், கிளை செயலாளர் செந்தில், தங்கவேல், முருகன், சின்னமுத்து, முன்னாள் தலைவர் நடராஜ் துரை,இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜகோபால், கோவிந்தராஜ், தங்கராஜ் ,ரவி குமார், அருள் மனோகரன், அமுதா நாகராஜ், மாதையன் ,சக்திவேல், சரவணன் மற்றும் கட்சியின் முன்னோடிகள் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News