அமைச்சர் நேரு மகனுக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள அண்ணா படிப்பகத்திற்கு இன்று வருகை தந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே .என்.நேரு மகன் கே .என் .அருண்நேருவிற்க்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்;

Update: 2024-03-08 17:10 GMT

அமைச்சர் மகனுக்கு உற்சாக வரவேற்பு 

திருச்சி மாவட்டம நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மகன் கே. என். அருண்நேரு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார்.

மேலும் லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர் திமுக நிர்வாகிகள் கே.என் அருண்நேரு பெயரில் விருப்ப மனு அளித்தனர். இந்நிலையில் கல்லக்குடி அண்ணா படிப்பகத்திற்கு வருகை தந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற போட்டியிட உள்ள கே.எண். அருண் நேருவிற்க்கு கல்லக்குடி பேரூர் கழக செயலாளரும்,பேரூராட்சி தலைவருமான பால்துரை தலைமையில் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News