குமரியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டம், கிழக்கு மாவட்ட திமுக அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், கிழக்கு மாவட்ட திமுக அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மாவட்டச் செயலாளர் மேயர் மகேஷ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகிகள் ஹெலன் டேவிட்சன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மகேஷ் பேசுகையில், - தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் காய் நகர்த்தல் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நாம் செயல்பட வேண்டும். திமுகவில் 23 அணிகள் உள்ளன. அணி நிர்வாகிகள் காழ்ப்புணர்ச்சியை மறந்து பணியாற்ற வேண்டும்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ள திட்டங்களை நாம் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். அனைவரையும் தலைமை கழகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின் போது எதிராக வேலை செய்யும் துரோகிகளை கண்டிப்பாக தலைவர் தண்டிப்பார். என கூறினார். இந்தக் கூட்டத்தில் தணிக்கை குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.