குடுகுடு அடித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர்

ஜக்கம்மா சொல்ற ஜக்கம்மா சொல்ற என உடுக்கை அடித்து பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

Update: 2024-03-29 06:58 GMT

 பிரச்சாரம் 

பொள்ளாச்சியில் குறி சொல்லும் நபராகவும் தெரியவில்லை,சொல்லும் விஷயமும் வினோதமாக இருக்கிறதே என்று நினைத்து நெருங்கிப் பார்த்தால் தான், அவர் குறி சொல்லும் நபர் வேடமணிந்து, தேர்தல் பிரசாரம் செய்து வரும் தி.மு.க., தலைமைக்கழக பேச்சாளர் என்பது தெரிந்தது. இந்த குடுகுடுப்பு 'கெட்டப்'பில் வந்த நபர் சேலத்தைச் சேர்ந்த கோவிந்தன் தனது நுாதன பிரசாரத்தை பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் மேற்கொண்டார். முன்னதாக ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள செல்லமுத்து நகரில் பேரூராட்சி தலைவர் கழகச் செயலாளர் அகத்தூர் சாமி அவர்கள் தலைமையில் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.. பின்பு ஜமீன் ஊத்துக்குளி மற்றும் செல்லமுத்து நகர் பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் 'லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் தான் எல்லா தொகுதிலயும் ஜெயிப்பாங்க, முதல்வர் ஸ்டாலின் நிறுத்தும் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க, அமைச்சர் உதயநிதி சொல்லும் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க... உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க, ஜெக்கம்மா சொல்றா.. ஜெக்கம்மா சொல்றா. அந்த கட்சி கூட்டணி தான் ஜெயிக்கப் போகுது' என்று பிரசாரம் செய்தவாறு 'குடுகுடுப்பை' அடித்துக் கொண்டே மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் சென்றார். சில பகுதிகளில் தி.மு.க.,வினர் அவருடன் சென்று வீதிவீதியாக இந்த பிரசாரத்தில் ஈடுபட்டனர்.. இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சையது அபுதாஹிர் மற்றும் கிளைச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்..
Tags:    

Similar News