பெரம்பலூரில் திமுக செயற்குழு கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மே.30ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் இராசா. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்,
கூட்டத்தில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் ஜூன் 3 அன்று பிறந்தநாள் விழா ஆகியவற்றை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது எனவும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள உள்ள வாக்குச் சாகுபடி முகவர்கள் விழிப்புடன் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக ஜெகதீசனை நியமனம் செய்த, திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் -க்கு , பரிந்துரை செய்த கழக இளைஞர் அணி செயலாளர் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா. போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், வழக்கறிஞர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், ஜெகதீஷ்வரன், அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சம்பத், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டகட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.