மருத்துவர் வெங்கடேஷ் கார்த்திகேயன் ஒருங்கிணைபாளராக நியமனம்

இந்திய மருத்துவ சங்க குழு தேசிய ஒருங்கிணைப்பாளராக டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-05-23 12:17 GMT

இந்திய மருத்துவ சங்க குழு தேசிய ஒருங்கிணைப்பாளராக டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ், ஆண்டி மைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் குழு (நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாட்டை தடுக்கும் குழு) செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளராக சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்திய மருத்துவ சங்க குழு தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயனை, இந்த குழுவின் மூத்த தலைவர்களான டாக்டர்கள் ஆர்.வி.அசோகன், அபுல்ஹாசன், பிரகாசம், செங்குட்டுவன், ஹரிஹரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News