வேலைக்கு அழைத்து சென்று தாக்குதல் - பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே கூலி வேலைக்கு அழைத்து சென்று சாதியை கூறி திட்டி தாக்கியதாக காவல்நிலைத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கதாதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே கூலி வேலைக்கு அழைத்து சென்று சாதியை கூறி திட்டி தாக்கியதாக காவல்நிலைத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலைமறியல்-ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நடராஜபுரத்தில் வசிப்பவர் சுதாகர் (56). இவரை உத்தண்டராயபுரத்தில் வசிக்கும் தமிழ்வாணன் என்பவர் கொத்தனார் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை சாதியை கூறி திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. பின் தமிழ்வாணன் சுதாகரை, மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்து அவரது வீட்டில் விட்டுவிட்டார். ஆனால் தொடர்ந்து, சுதாகருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது மனைவி தமிழரசி, தனது கணவனை அழைத்து சென்ற தமிழ்வானன் வீட்டில் சென்று கேட்டபோது அவர் சரியாக பதில் கூறவில்லை இதனால், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 29 //2/2023 அன்றும் பின் 7/1/2024 அன்று மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், மயிலாடுதுறை - பட்டவர்த்தி செல்லும் சாலையில் அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மனி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் மணல்மேடு காவல் ஆய்வாளர் மாரிமுத்து, போராட்டகாரர்களிடம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என கூறியதன் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.