செங்கல்பட்டு மாவட்டத்தில் நில அதிர்வு; மக்கள் அதிர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டத்தில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Update: 2023-12-08 10:16 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருப்பதாக தெரிகிறது. பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.