குமரி பாராளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் 

27ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update: 2024-03-19 06:15 GMT

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை 20ஆம் தேதி தொடங்குகிறது. பாரதிய ஜனதாவை தவிர மற்ற கட்சிகள் பிரச்சாரத் திட்டத்தை இப்போதுதான் வகுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகிற 27ஆம் தேதி குமரி மாவட்டம் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

அன்று மாலை நாகர்கோவில் நாகராஜா திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். தற்போதைய நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மீனவர் அணி மாநில இணைச்செயலாளர் பசலியான், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் ராணி போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. இந்த பட்டியல் கடைசி நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என்றும் கட்சி நிர்வாகிகள் கூறினர்.

Tags:    

Similar News