கருப்பூரில் அதிமுக பிரமுகர் இல்ல திருமணம் - மணமக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி
கருப்பூரில் நடந்த அதிமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சேலம் மாவட்டம், இனாம் வேடுகத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த மறைந்த அதிமுக மூத்த நிர்வாகி ராஜமாணிக்கத்தின் பேரனும், சேலம் கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி செல்வபிரகாஷ் - லாவண்யா தம்பதியினரின் மகனுமான கலையரசனுக்கும், காடையாம்பட்டி தாலுக்கா சிக்கனம்பட்டி ஊராட்சி நரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த ரத்தினம் ஜெயக்கொடி தம்பதியினரின் மகள் பிரத்தினா என்பவருக்கும் ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் தனியார் தீர்த்தமலை திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விழாவில் கலந்து கொண்டு புதுமண தம்பதியினருக்கு பூங்கொத்து கொடுத்து ஆசீர்வாதம் செய்து தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணோன்மணி, ஒன்றிய கழக செயலாளர்கள் வையாபுரி, ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.