முதியோர் தினவிழா - மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
Update: 2023-11-01 01:20 GMT
குமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் அக்டோபர் மாதம் முழுவதும் முதியோர் தினவிழா அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில் அழகிய மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பிலாங்காலை முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டி விழாவினை சிறப்பித்ததோடு, முதியோர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் இரா.சரோஜினி, குறுகிய கால தங்கும் விடுதி தலைவர் சாந்தா பாலகிருஷ்ணன், மாத்தார் மற்றும் பிலாங்காலை முதியோர் இல்ல நிர்வாகிகள், மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டனர்.