தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு.

Update: 2024-03-25 07:10 GMT

ஆய்வு

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தேர்தல் செலவின மேற்பார்வையாளராக மனோஜ்குமார் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பணி குறித்து ஆய்வு செய்தார். அப்போது, பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனைகளை வெவ்வேறு இடங்களில் சோதனை செய்ய வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு வருபவர்கள் உரிய ஆவணங்கள் எடுத்து வர பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். சங்கராபுரம் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், மண்டல துணை தாசில்தார் ராமசாமி, தலைமையிடத்து துணை தாசில்தார் திருமலை உடனிருந்தனர்.
Tags:    

Similar News