தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் சோதனை

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-17 06:34 GMT

வாகன சோதனை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 நிலையான கண்காணிப்பு குழு மற்றும் 3 பறக்கும் படை வாகனங்கள் ஜிபிஎஸ் கேமரா பொறுத்தப்பட்ட வாகனங்களுடன் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. கண்காணிப்பு குழு அதிகாரி, இரண்டு போலீசார் மற்றும் வீடியோ கேமராடன் அடங்கிய இந்தக் குழுவினை தங்கள் பணியை துவங்கினர்.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்ததை மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி நேரடியாக கள ஆய்வு செய்து வாகன சோதனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் பிரிவு செல்வம், ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர் முத்துவடிவேல், தேர்தல் தனி வட்டாட்சியர் விஜயராகவன் உடனிருந்தனர். .

Tags:    

Similar News