நகை, அடகு கடை உரிமையாளர்களிடம் தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம்!
நகை, அடகு கடை உரிமையாளர்களிடம் தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-19 11:57 GMT
ஆலோசனை கூட்டம்
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோர் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (19.03.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.வெங்கடாசலம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.