முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசனில் நடந்த வளாக நேர்முக தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

Update: 2024-02-15 04:19 GMT

பணி நியமன ஆணைகள் வழங்கல் 

வநேட்ரா கல்வி குழுமத்தைச் சேர்ந்த முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன்-ல் சென்னையில் உள்ள டர்போ எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினரால் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். டர்போ எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மனிதவளத் துறை தலைமை மேலாளர் முரளி, மற்றும் மனிதவளத் துறை மேலாளர் நடராஜன் ஆகியோர் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்ய வந்திருந்தனர்.

மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் மற்றும் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்ந்த மாணவர்கள் சுமார் 220 பேர் இதில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன்-ஐ சேர்ந்த 35 பேர, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவர்கள் மற்றும் பிற கல்லூரியிலிருந்து 34 பேரும், மொத்தம் 84 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தங்களது இறுதி ஆண்டு படிப்பை முடித்த பின் வேலையில் சேர உள்ளனர். வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்ட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பணி நியமன ஆணைகளை டர்போ எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை தலைமை மேலாளர் மற்றும் மேலாளர் இன்ஸ்டிடியூசனின் செயலாளர், முதல்வர் ஆகியோர் வழங்கினர் வேலை வாய்ப்பைப் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் கே.பி.இராமசுவாமி , செயலாளர் இரா.முத்துவேல் , முதல்வர் Dr.R.மணி , அனைத்துத் துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கேம்பஸ் இன்டர்வியூக்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறைத்தலைவர் S.சங்கள் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News