கோபித்து சென்ற மனைவி - குடிகார கணவன் தற்கொலை

மயிலாடுதுறை அருகே மனைவி கோவித்து சென்றதால் விரக்தி அடைந்த குடிகார கணவன் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2024-05-05 06:49 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே கோமல் கீழ அம்பேத்கர் நகர சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் மனோகர். இவரது மனைவி இந்திரா. மனோகர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவிடம் தகராறு செய்து வருவது வாடிக்கை.  மேலும் இவருக்கு வயிற்று வலியும் அதிகமாக இருந்து வந்த நிலையில்,  கடந்த மாதம் 25ஆம் தேதி இரவு குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தயாராக செய்து அடித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு இந்திரா தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

Advertisement

மனோகர் வற்புறுத்தியும் வீட்டுக்கு வர மறுத்ததால். விரக்தி அடைந்த மனோகர் தன் வீட்டிற்குள் சென்று வீட்டில் இருந்த மண் எண்ணெய் எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  தீக்காயத்தால் போராடியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அங்கே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.  அவர் சிகிச்சை  பலனின்றி இறந்துவிட்டார் இது குறித்து  மனோகரனின்  மனைவி இந்திராணி அளித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News