"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்"

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் புத்தறிவுப் பயிற்சி.

Update: 2024-03-09 08:17 GMT

பெண்குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி

. ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் புத்தறிவுப் பயிற்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட மகளிர் திட்டத்தை சார்ந்த வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான புத்தறிவுப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில், குழந்தை திருமணம் மற்றும் இள வயது கர்ப்பத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தினால் தாய்-சேய்க்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணத்தடைச்சட்டம், போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, 181, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், பெண் குழந்தைகளுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சு.சண்முகவடிவு, மருத்துவ அலுவலர் பா.தனலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News