முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 9ஆம் தேதி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-08 09:41 GMT
மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 09.02.2024 அன்று மாலை 04.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முத்து அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்துகொண்டு தங்கள் மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.