விவசாயி தூக்கிட்டு தற்கொலை

மணலுார்பேட்டை அருகே விவசாயி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-07 09:08 GMT

தற்கொலை

மணலுார்பேட்டை அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செலம்பன், 55; இவரது மனைவி பொண்ணு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரண்டு மகள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில், தனிமையில் மனமுடைந்த நிலையில் செலம்பன் நேற்று முன்தினம் மாலை தனது நிலத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News