மாப்பூ கருகுவதால் விவசாயிகள் கவலை
நாகை மாவட்டத்தில் 5000 ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ள மா மரப் பூ கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத் தாகுடி, கத்தரிப்புலம் புஷ்பவ னம், பெரியகுத்தகை, வெள் ளப்பள்ளம், நாலுவேதபதி, தலைஞாயிறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் செந்தூரா, பங்கன பள்ளி, ருமெனியா, ஒட்டு, நீலம் என 10க்கும் மேற்பட்ட வகையான மா வகைகள் 5000 ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ளது. ஆண்டுதோறும் இப்பகுதியில் சுமார் 5,000 டன் மாங் காய்களை மா பழத்திற்காக தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
தற்போது மா காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என மா விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது மாபூக்கள் பனியின் காரணமாகவும் மற்றும், தேன்பூச்சி தாக்குதாலும் அதிகளவில் பாதிக்கபட்டு பூக்கள் கருகியதால் மாங்காய் மிக குறைந்த அளவே காய்க்க தொடங்கி உள்ளது. மேலும் தற்போது மா மாங்காய்களில் புதி தாக கருப்பு பூச்சி தாக்கி உள்ளது.
இந்த பூச்சி தாக்குதல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அதிகளவில் காணப்படுகிறது. புதிய இந்த கருப்பு பூச்சி தாக்குதலால் மா இலையில் இருந்த பூச்சிக ளால் மா பிஞ்சுகளிலும் தாவி வீனாகி கீழே விழுந்து வருகிறது. வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வேளாண்மை துறை அதிகாரிகள் தாமதம் இன்றி உடனே கிராமபுரங்களில் உள்ள மா மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து என்ன வகையான பூச்சி தாக்குதல் அதற்கு என்ன வகை யான மருந்துகளை தெளிக்க வேண்டும் என விவசாயி களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என மா விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.