மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் பாராட்டு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவரது சேவையை விவசாயிகள் பாராட்டினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 15:03 GMT
ஆட்சியரை பாராட்டிய விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவரது சேவையை பாராட்டி விவசாயிகள் சால்வை அணிவித்து மரியாதை , தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலகலப்பாக கலந்துரையாடினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தான் பொறுப்பேற்றுக் கொண்டு ஓராண்டு நினைவு பெற்றதை தொடர்ந்து விவசாயிகள் பலர் ஒன்றிணைந்து ஆட்சியருக்கு சால்வை அறிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்து திறம்பட பணிகளை ஆட்சியை செய்து வருவதாக விவசாயிகள் புகழாரம் சூட்டினர். பொதுமக்களுடன் ஆட்சியர் இணக்கமாக செயல்பட்டு தொடர் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதால் பலதரப்பினரும் ஆட்சியரை பாராட்டி வருகின்றனர்.