தென்னை மரங்கள் சேதம் கண்ணீர் விட்டு அழும் விவசாயிகள்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மலை கிராமமான பாஸ்மார்பெண்டா கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த கிராமத்தை சுற்றி அரவட்லா, கொத்தூர் உள்ளிட்ட வனப்பகுதி சூழ்ந்த மலைகள் கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அதிக அளவு யானைகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் அவ்வப்போது விவசாய நிலங்கள் வனவிலங்குகளால் சேதமடைந்து வருவதாகவும் அப்பகுதி மகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் யானை கூட்டங்கள் அவ்வப்போது விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ராஜேந்திரன், ஜனகராஜ், மகேந்திரன், சங்கரன் ஆகியோரின் விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைகள் சுமார் 100 தென்னை மர செடிகள் மற்றும் வாழை மரங்களும் சேதப்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையை போல் வளர்த்து வந்த தென்னை மரங்களை யானை கூட்டங்கள் சேதப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையாக தெரிவிக்கின்றனர். யானைகள் சேதப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் மேலும் யானைகள் வராமல் தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.