விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக தந்தை மகன் மீது தாக்குதல்

விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக தந்தை மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-01-16 13:38 GMT
முன்விரோதம் காரணமாக தந்தை மகன் தாக்குதல் காவல்துறையினர் வழக்கு பதிவு

விருதுநகர் அருகே உள்ள புல்லலக்கோட்டை பகுதியைச் சார்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் அஜித்குமார். லிங்கம் என்பவர் அதே பகுதியைச் சார்ந்த காட்டுராஜா என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை அஜித்குமார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து லிங்கத்தை விளக்கி விட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த லிங்கம் தனது சகோதரர் செல்வம் மற்றும் முனி பாண்டி, ராஜபாண்டி, ஈஸ்வரன், மற்றும் கட்டரை ஆகிய ஆறு பேரும் அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று தர குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க வந்த அஜித்குமாரின் தந்தையையும் அவர்கள் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய காவல் நிலையத்தில் கருப்பையா புகார் புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News