நத்தஅள்ளில் காளியம்மன் கோயில் தேர் திருவிழா

இண்டூர் அருகே நத்தஅள்ளியில், வெகு விமர்சையாக காளியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது.

Update: 2024-05-07 09:40 GMT
தேர் திருவிழா 

தர்மபுரி மாவட்டம், இண்டூர் நத்தஅள்ளி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் சித்திரை தேர்திருவிழா கடந்த ஏப்ரல் 22ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. 23ம் தேதி அக்னி திருநாள் நிகழ்ச்சியும், 24ம் தேதி கும்ப பூஜையும்,

மே 3ம் தேதி விநாயகர் தேர் வடம் பிடித்து இழுத்தல் நடந்தது. முக்கிய நாளான இன்று 18 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்று கூடி காளியம்மன் சித்திரை தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. விழாவில் 18 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்று கூடி காளியம்மன் சித்திரை தேரை இழுத்தனர்.

ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.10-ஆம் தேதி மஞ்சள் நீராட்டுதல் மற்றும் பந்தகாசி விழாவுடன் கோயில் நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News