முப்பெரும் தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் நடந்த லால்பகதூல் சாஸ்திரி, திருப்பூர் குமரன் நினைவு, விவேகானந்தர் பிறந்த தின முப்பெரும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-01-11 15:05 GMT

முப்பெரும் விழா 

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் லால்பகதூல் சாஸ்திரி, திருப்பூர் குமரன் நினைவு விவேகானந்தர் பிறந்த தினம் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அதன் நிறுவனர், தலைவர் திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி முப்பெரும் தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.

பின்னர் பொது மக்களுக்கு அவர்களின் நினைவை போற்றும் வகையில் லால்பகதூல் சாஸ்திரி, திருப்பூர் குமரன், விவேகானந்தர் வாழ்கை வரலாற்று புத்தகங்களை வழங்கி பேசியதாவது. லால்பகதூல் சாஸ்திரி, திருப்பூர் குமரன் ஆகிய தலைவர்கள் காந்தியின் கொள்கையை பின்பற்றி மக்கள் நலனுக்காக போராடியவர்கள். லால்பகதூல் சாஸ்திரி மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டதன் காரணமாக இந்திய அரசின் பிரதமராக பதவி வகிக்கும் அளவிற்கு உயர்ந்து மண்ணைவிட்டு மறைந்த பின்பும் இன்றளவும் வணங்கப்படுகிறார். திருப்பூர் குமரன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை விட்டு வேலைக்கு சென்று மக்கள் நன்மைக்காக போராட்டங்களில் பங்கேற்று மக்களுக்காக போராட்ட களத்தில் உயிரை விட்ட மாபெரும் தலைவர்.

விவேகானந்தர் அன்புமிக்க தனித்தறிவு பெற்ற, நன்மை ஒன்றே, உடலிலும் மனதிலும் வீரமிக்க, உலகின் எவ்வளவு பெரிய பணக்காரன், பதவிக்காரன் என்றாலும் தீமைக்கு எதிராக ஒற்றை நபராக எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவுமிகுதியாக செயல்பட்டு, பணம், பதவி, சொகுசு வாழ்வை விரும்பாத உலகம் போற்றும் மாபெரும் தலைவர், இன்றைய இளைஞர்களின் ஆசான் ஒவ்வொரு இளைஞனும் விவேகானந்தரை பின்பற்றி தங்கள் வாழ்வை மாற்றி உயர்ந்த மனிதர்களாக வர வேண்டும் இவ்வாறு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய பிற நாட்டின், மாநில, மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News