திருக்கோஷ்டியூரில் பூச்சொரிதல் விழா

திருக்கோஷ்டியூரில் 32 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Update: 2024-04-06 07:32 GMT

பூச்சொரிதல் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கோவிலில் 32 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு பல வகையான பூக்களை சமர்ப்பித்து வழிபாடு செய்தனர். முன்னதாக மூலவர் வடக்கு வாசல் செல்வி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மரிக்கொழுந்து, மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, அரளி உள்ளிட்ட பல வகையான பூக்களை தாம்பாளங்களில் வைத்து மங்கள வாத்தியங்கள் மற்றும் வானவெடிகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் சமர்ப்பித்த பூக்களால் அபிஷேகம் செய்து, பூச்செரிதல் விழாவை நடத்தினர். நிறைவாக அம்மனுக்கு ஏக, முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News