நாட்டுப்புற கலைஞர்கள் விழா: அமைச்சர் கீதா ஜீவனுக்கு விருது
தூத்துக்குடியில் நடைபெற்ற நாட்டுப்புற கலைஞர்கள் விழாவில் அமைச்சர் கீதா ஜீவனுக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைச்சங்கமம் கலை விழா நடைபெற்றது. நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் கலைச்சங்கமம் கலை விழாவின் ஒருங்கிணைப்பாளர் சேர்மதுரை வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், கீதா மெட்ரிக் பள்ளி குழுமங்களின் தலைவர் ஜீவன் ஜேக்கப் உட்பட மாநகர கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் கீதா ஜீவனுக்கு விருது வழங்கப்பட்டது.
லிங்கம்மாள் குழுவினர் வில்லிசை, செல்வமணி குழுவினர் நையாண்டி மேளம், கரகாட்டம் தமிழன்டா கலைக்குழு ஜெகஜீவன் குழுவினர் பறையாட்டம், மயில் ஆட்டம் , குதிரை ஆட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளர்கள் சேர்மதுரை, காளிதாசன், குட்டிராஜா, ஆகியோர் செய்திருந்தனர்.