உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு

9 கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல்.

Update: 2024-03-08 05:10 GMT

கடைக்கு சீல்

திண்டுக்கல் நகர் ஆத்தூர் நிலக்கோட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 9 கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.
Tags:    

Similar News