மக்கள் நீதி மய்யம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

Update: 2023-11-19 08:07 GMT
மருத்துவ முகாம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மக்கள் நீதி மையக் கட்சியின் மத்திய மாவட்ட சார்பில் காரியாபட்டி எஸ் பி எம் டிரஸ்ட் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியவை இணைந்து விருதுநகர் பாண்டியன்நகரில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். இந்த முகாமை காரியாபட்டி எஸ்பிஎம் டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமானோர் பங்குபெற்று கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் கண்ணாடிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு மழைக்காலத்தில் பயன்படுத்தக்கூடிய வகையிலான குடைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் காளிதாஸ் ,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ராஜலட்சுமி ஆகியோர் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News