அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு இலவச உடல் பரிசோதனை முகாம்

திருச்சியில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு இலவச உடல் பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2024-02-06 09:08 GMT

திருச்சியில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு இலவச உடல் பரிசோதனை முகாம் நடந்தது. 

திருச்சி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 15 .1 .2024 முதல் 14.2.2024 வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது .இதனை கொண்டாடும் பொருட்டு இன்று 06/02/2024 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் ஓட்டுநர், நடத்துனருக்கு இலவச உடல் பரிசோதனை முகாமினை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை ஆட்சியர் சக்திவேல் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் எஸ். சக்திவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருச்சி அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இளநிலை நிர்வாக அலுவலர் , தலைமையில் சிறப்பு அழைப்பாளராக அகர்வால் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவர் ராமலிங்கம் மூலம் திருச்சி மண்டல அலுவலகத்திலும் மத்திய பேருந்து நிலையத்திலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் ஓட்டுநர் நடத்துனர்களின் உடல்நலம் மேம்படுத்தும் பொருட்டு மதுரை ராக்ஸ் மருத்துவமனை மூலம் சிறப்பு கட்டணமில்லா மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், உதவி கிளை மேலாளர் மகேந்திரன், உதவி பொறியாளர் ( பயிற்சி )மற்றும் ஓட்டுநர்கள் நடத்தினார்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News