கஞ்சா கடத்தல்: 4 பேருக்குதலா 10 ஆண்டுகள் சிறை
கஞ்சா கடத்திய 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் மதுரை மாவட்ட முதன்மை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கம்பம் கோம்பை சாலையைச் சோந்த சிவசாமி மகன் அன்பு (28), குரங்குமாயன் தெருவைச் சோந்த குமாா் மகன் சஞ்சய்குமாா் (21), திருவண்ணாமலை மாவட்டம், இளஞ்சேரியைச் சோந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித் (30), பெரியகாஞ்சிபுரம்,வெள்ளக்குளம் பகுதியைச் சோந்த வெங்கடேசன் மகன் பாலசுப்பிரமணி(23). இவா்கள் 4 பேரும் கம்பம் அருகே கம்பம்மெட்டு சாலையில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ாக கடந்த 2022-ஆம் ஆண்டு கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 123 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் மதுரை மாவட்ட முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அன்பு, சஞ்சய்குமாா், ரஞ்சித், பாலசுப்பிரமணி ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா்.