கெங்கவல்லி : குட்கா விற்றவர் கைது

Update: 2023-12-18 06:29 GMT
1
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக, ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜனுக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில், வீரகனூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார், வீரகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சொக்கனூர் ஆலமரத்து தெருவில் உள்ள மளிகை கடையில், சோதனை செய்த போது ஹான்ஸ் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடை உரிமையாளர் பொன்மணி (50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News