போளூர் அருகே பெண் குழந்தைகள் கிணற்றில் விழுந்து பலி
போளூர் அருகே பெண் குழந்தைகள் கிணற்றில் விழுந்து பலியாகினர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-28 10:17 GMT
பலியான குழந்தைகள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரிய அகரம் காந்தி நகர் பனந்தோப்பு கிராமத்தில் தமிழ்ச்செல்வன் மகள் சிந்து பாரதி ,கலசபாக்கம் அடுத்த அணியாளை காம்பட்டு கிராமம் அசிர் மகள் பவ்யஸ்ரீ ஆகிய இரு குழந்தைகளும் சிவா என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
காவியா மற்றும் அவருடைய அண்ணி பிரித்தியும் குழந்தைகள் இல்லாத கண்டு இருவரும் தேடி பார்த்த போது கிணற்றில் இருந்த குழந்தைகளை பார்த்து கூச்சலிட்டனர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றில் இருந்த குழந்தையை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.