அரசு கட்டிடம் வாடகைக்கு - ஆட்சியர் தகவல்

ஈரோடு படைவீரர் மாளிகையில் காலியாக உள்ள தளங்களில் வாடகைக்கு வர விரும்பும் அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-08 07:27 GMT

ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா

ஈரோடு , காந்திஜி ரோட்டிலுள்ள படைவீரர் மாளிகையின் முதல் தளத்தில் 827.00 சதுர அடியும், இரண்டாம் தளத்தில் 890.93 சதுர அடியும் மற்றும் மூன்றாம் தளத்தில் 570.00 சதுர அடியும் சேர்த்து மொத்தம் 2,287.93 சதுர அடி இடம் அலுவலக உபயோகத்திற்கு காலியாக உள்ளது. இவ்விடத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறையினரால் நிர்ணயிக்கப்படும் வாடகையே வசூல் செய்யப்படும். இவ்விடமானது மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் வங்கிகளுக்கும் / பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மாத வாடகைக்கு உரிம ஒப்பந்த அடிப்படையில் உரிம கட்டணத்திற்கு விடப்பட உள்ளது. மேலும் விவரங்கள் அறிந்திட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2263227 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News