மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர் கூட்டம் மார்ச்14ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-03-09 07:29 GMT
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து அவரவருக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்து கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மார்ச் 14ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.