வெப்ப அலை வீசும் - உஷாராக இருக்க கலெக்டர் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு ஆட்சியர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-04-25 02:49 GMT

ஆட்சியர் கலைச்செல்வி

தமிழகத்தில் சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் எனவும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, பிற்பகல் 12:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வெயில் தாக்கத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும் எனவும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News