கனமழை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
Update: 2023-11-23 02:26 GMT
கனமழை
தமிழகத்தில் நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் , மிதமான மழையும் பெய்து வருவதுடன் கடும் குளிர் நிலவுகிறது. இந்த கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.