மயிலாடுதுறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை
Update: 2023-11-26 05:28 GMT
மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே மழைப்பொழிவு இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில், முன்னிரவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி, பொறையார், சங்கரன்பந்தல், பெரம்பூர், மங்கநல்லூர், குத்தாலம் , பூம்புகார், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோயில்,சீர்காழி, திருமுல்லைவாசல், கொள்ளிடம்உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை விட்டு விட்டு பெய்தது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.