சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை.
Update: 2023-11-23 01:33 GMT
கனமழை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புளியம்பட்டி, கரிவலம்வந்தநல்லூர், குருவிகுளம் மற்றும் குருக்கள்பட்டி ஆகிய பகுதிகளில் இரவு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மேலும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையினால் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர், மேலும் இதே போன்று மழை பெய்தால் குளங்கள் மற்றும் கண்மாய்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு விவசாயம் செய்வதற்கு எதுவாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.