ராஜாக்கமங்கலத்தில் வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே வீட்டில் 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-04-26 02:45 GMT
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே தெற்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சுதா நேசலி (44). சம்பவ தினம் இவர் தனது மகளுடன் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது கணவரிடம் வீட்டு சாவி வைத்துள்ள இடத்தை போனில் தகவல் தெரிவித்துள்ளார், சிறுநேரம் கழித்து வீட்டிற்கு சென்ற ராஜேந்திரன் சாவியை தேடிய போது அங்கு சாவி இல்லை.
அதே நேரம் வீட்டின் முன்பக்கம் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ஆறு பவுன் தங்க நகைகளை காணவில்லை. இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார் சம்பவம் சென்று விசாரணை கிடைத்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.