வீட்டு மனை பிரச்சினை - முன்னாள் கவுன்சிலர் கைது

விழுப்புரத்தில் வீட்டு மனை பிரச்சினையில், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய முன்னாள் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-13 05:30 GMT

காவல்துறை விசாரணை


விழுப்புரத்தில் வீட்டு மனை பிரச்சினையில், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய முன்னாள் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் பழைய கோர்ட் சாலை பகுதியை சேர்ந்தவர் அகமது(55) முன்னாள் நகர மன்ற கவுன்சிலரான இவர் தனது நண்பர்களான, விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த ஏழுமலை, சித்தேரிக்கரை பாலாஜி ஆகியோருடன், நேற்று முன்தினம் மாலை முன்விரோதம் காரணமாக, திரு.வி.க., வீதியில் உள்ள சிவசங்கரன்(67) என்பவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் சிவசங்கருக்கு சொந்தமான 3,000 சதுரடி அளவில் உள்ள வீட்டு மனையை, தனக்கு சொந்தமானது என கூறிய அகமது, சிவசங்கரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து, அவரிடம் தகராறு செய்து, அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் பொருட்களை உடைத்தும், தீ வைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து, சிவசங்கரின் கொடுத்த புகாரின் பேரில், அகமது, ஏழுமலை, பாலாஜி ஆகியோர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்ததனர். நேற்று அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News