காட்டுமன்னார்கோவில்: மனுநீதி நாள் முகாம்
கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோயிலில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-02-02 02:03 GMT
மனு நீதிநாள்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா,திருமண உதவித்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருந்துகள் , தோட்டக்கலை துறை சார்பில் மரக்கன்றுகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ வழங்கினார்.